கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற 5 இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்களை சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனத்திலிருந்து தப்பியவர்கள் கூறினர்.
ஆனால், சீன இராணுவம் இரண்டு நாள்கள் முன் 5 இந்தியர்களும் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், அவர்களை இன்று ஒப்படைப்பதாகவும் கூறியது. இந்நிலையில், சீன இராணுவம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து இளைஞர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஐந்து பேரும் கிபித்து எல்லை தபால் வழியாக அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்தனர். அனைத்து நடைமுறைகளையும் முடித்த பின்னர், கொரோனா நெறிமுறையின்படி இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…