ஹைதராபாத்தில், மகனை நீட் தேர்வு எழுத அனுப்பிவிட்டு தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்.
ஹைதராபாத், மேடக் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை மருத்துவர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள், நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது மனைவி அனுராதா மற்றும் மகன் சோஹன் சாய் வெங்கட் ஆகியோருடன், மகன் நீட் தேர்வு எழுதும் மையத்திற்கு சென்று, அங்கு வெங்கட்டாய் மையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மேடக் நகருக்கு சென்றார்.
மருத்துவரான அனுராதா தம்பதியினரால் நிர்வகிக்கப்படும், அனுராதா மருத்துவமனையில் அவசர வழக்கு இருந்ததால் அவசர அவசரமாக மகனை இறக்கி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் சந்திரசேகர் KPHB கிராண்ட் ஹோட்டலில் ஒரு அறையை பதிவு செய்தார். அவருக்கு அறை எண் 314 கொடுக்கப்பட்டது. அதற்குள் நுழைந்த மருத்துவர் சந்திரசேகர் கன நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனையடுத்து, சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் அவர் வெளியே வராத நிலையில், அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கொண்டனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதாரங்களின்படி மருத்துவர் மேடக்கில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் தர்மகாரி ஸ்ரீனிவாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரோடு தொடர்புடையவர். கடந்த மாதம் ஒரு காரின் உட்பகுதி அவரது உடல் கருகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போதிலிருந்து மருத்துவர் மனம் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது தற்கொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற சரியான தகவல் இன்னும் தெரியவரவில்லை.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…