டெல்லி காவல்துறை எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். வன்முறையை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025