தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியபாத்தில் 28 வயதான வாசுதேவ் தனது மனைவி குப்தா, 4 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வாசுதேவுக்கும் அவரது மனைவி குப்தாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் வலுக்கவே குப்தா தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டார். எனவே அவர்களின் 4 வயது மகள் வாசுதேவுடன் இருந்துள்ளது.
மனைவியை காணவில்லை என வாசுதேவ் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அவர்களின் மகளும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தாததால் கோவத்தில் கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்துள்ளார். அதன் பின் குழந்தையின் சடலத்துடன் மனைவியை தேட துவங்கியுள்ளார். இந்நிலையில் குப்தாவின் சகோதரன் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து யாரும் இல்லாததால் வாசுதேவுக்கு போன் செய்துள்ளார்.
அப்பொழுது அவர் குழந்தையை கொலை செய்துவிட்டு குப்தாவை தேடுவதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த குப்தாவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வாசுதேவை உடனடியாக கைது செய்து அவரை விசாரித்ததில், ஏற்கனவே மனைவியை காணவில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர்ச்சியாக குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…