இன்று பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் , சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது. பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்தது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.பீகார் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதாவது, சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…