Categories: இந்தியா

Rahul Gandhi: நாட்டின் 60% மக்களை அரசு மதிக்கவில்லை.. ஜி20 மாநாட்டிற்கு அழைப்பில்லை – ராகுல் காந்தி

Published by
பாலா கலியமூர்த்தி

லைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாட்டு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் நோக்கி வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தாண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இதனிடையே, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பெல்ஜியம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்  சந்திப்பில் பேசிய அவர், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார். மேலும் பேசுகையில், நாட்டின் 60% மக்களின் உணர்வுகளை மத்திய பாஜக அரசு மதிப்பதில்லை என குற்றசாட்டினார். டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை.

மத்திய அரசின் செயலுக்கு பின்னால் உள்ள சிந்தனையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூரில் ஜனநாயக உரிமைதான் மக்களுக்கு  தரப்பட வேண்டும், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும். எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்ற அற்புதமான பெயரைக் கொண்டு வந்தோம். இது நாங்கள் யார் என்பதை சரியாக பிரதிபலிக்கிறது. எங்களை இந்தியாவின் குரல் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இது பிரதமரை தொந்தரவு செய்துள்ளதால், நாட்டின் பெயரை மாற்ற விரும்புகிறார், அது மிக அபத்தமானது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago