குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்.!
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு, முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு முறைகேடுகளால் நிறைந்ததாகவும், குறிப்பாக தமிழ் வழிக் கல்வி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், ” ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். குளறுபடிகளின் உச்சமாக உள்ள குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும். குரூப் 4 தேர்வை நடத்தி மாணவர்களின் வாழ்க்கையில் திமுக அரசு விளையாடியுள்ளது.
மறுதேர்வு நடத்தப்பட வேண்டும், பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கும் தேர்வை எவ்வளவு முறையாக நடத்த வேண்டும்? ஸ்டாலின் மாடல் அரசு மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி உள்ளது. அரசு தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது.
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 22, 2025