உத்தரபிரதேச மாநிலம் ஹ்தராஸில் இளம் பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் ஹ்தராஸில் இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாகவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கும்,மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இது குறித்து அனைத்து தரப்பினரும் அக்.,12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நெஞ்சையே பதறவைத்த இச்சம்பவம் குறித்து நீதிபதிகள் கூறியதாவது: இக்கொடூர சம்பவம் மனசாட்சியை உலுக்கி விட்டதாகவும் காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அவசரமாக எரித்தது மிகுந்த வலியைத் தருவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துள்ள நீதிபதிகள் எந்த வகையிலும் அக்குடும்பத்திற்கு மிரட்டலோ, அழுத்தமோ, வலியுறுத்தலோ யாரும் செய்யக்கூடாது என்று கரராக உத்தவிட்டுள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…