அதிக விலைக்கு விற்ற கொரோனா வைரஸ் மருந்து ‘ரெம்டெசிவர்’.! 7பேர் கைது.!

Published by
Ragi

கொரோனா ஊசி மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7பேர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிற நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவர் என்ற ஊசி மருந்தை அதிக விலைக்கு 7 பேர் விற்பனை செய்ததை அடுத்து மும்பை போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அந்த ஊசி மருந்தின் விலை ரூ. 5,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊசி மருந்தை  7 பேர் கொண்ட கும்பல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ, 30,000-க்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை நகரில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 7 ஊசி மருந்துகளை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் மோசடி மற்றும் எஃப்டிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 24 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்ட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago