புரேவி புயலைத் தொடர்ந்து நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இலங்கையில் இரவு கரையை கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்றவர்களுக்கு திரும்பவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் புயலை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தென்தமிழகத்தில் தயாராக உள்ளனர். நிவர் புயல் பாதிப்பே இன்னும் முழுமையாக சரி கட்டப்படாமல் இருக்கிறது. இருப்பினும் அடுத்ததாக புரேவி புயலை எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…