கர்நாடகாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,00,000-ஐ கடந்தது.!

கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 8,161 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,161 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,91,826 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 6,814 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,04,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,958 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025