இராணுவ நிலைப்பாட்டை தீர்க்க ஒரே வழி சீனா இதை நிறுத்த வேண்டும்.! இந்திய தூதர்.!

கடந்த 15-ம் தேதி லடாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடந்து , லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால், பேச்சு வார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை, தொடர்ந்து சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி நேற்று பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அழைத்த பேட்டியில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசை (எல்.ஐ.சி) இராணுவ நிலைப்பாட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி சீனா புதிய கட்டமைப்புகளை அமைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
சீனாவின் மீறலால் இருதரப்பு உறவில் விளைவுகள் ஏற்படும் என்று மிஸ்ரி கூறினார். எல்.ஐ.சியின் இந்தியப் பக்கத்தில் இந்தியா எப்போதுமே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை மிஸ்ரி வலியுறுத்தி, எல்.ஐ.சியின் இந்தியப் பக்கத்தில் மீறல் மற்றும் கட்டமைப்புகளை எழுப்ப முயற்சிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என்று கூறினார்.