கொரோனாவை தடுக்க ஒரே வழி இது தான் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பயப்பட வேண்டாம்.முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி ஆகும்.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது .அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது . 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.