குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் அரசு வழங்கிய உயரிய விருது.!

President

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு, சுரினாமின் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக சுரினாமுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்(Grand Order of the Chain of the Yellow Star) விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தென்னமெரிக்க நாடான சுரினாம் அரசு வழங்கும் இந்த உயரிய கவுரவம் நம் இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நட்பை அடையாளப்படுத்தும் விதமாக இருப்பதாக திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

விருது வாங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது வாங்கியபின் ஜனாதிபதி முர்மு, சுரினாமின் மிக உயர்ந்த சிறப்பைப் பெறுவதற்கு மிகவும் பெருமைப்படுவதாக கூறினார், மேலும் இந்த விருது அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, நம் இந்திய மக்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை மேம்படுத்துவதில், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இந்த கௌரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன் என ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.<

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்