ஆளுநர் பேப்பரையாவது படிக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார் என அமைச்சர் பொன்முடி பேட்டி.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார்; தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை செய்கிறார்கள்; வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்றுள்ளார், அவர் ஊட்டிக்கு சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது.
ஆளுநர் பேப்பரையாவது படிக்க வேண்டும்; ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது; துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே ஆளுநர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது என்று கூறுகிறார்.ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.