Gas cylinder [Representative Image]
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறைக்கப்படும் ரூ.200-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மத்திய அரசே வழங்கும் என்றும் இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதுபோன்று, நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியமும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுகிறது என்றார்.
எனவே, வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது. சென்னையில் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.1,118க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரூ.1,118 ஆக உள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை இனி ரூ.918க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…