ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நகருக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹாவல்பூர், மியானோ, சோர் மற்றும் கராச்சிக்கு அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி உள்ளதாக தெரிகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஹரோப் ரக டிரோன் மூலம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் தாக்குதலில் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தது.
ஏற்கனவே, ராவல்பிண்டியில் இன்று இரவு PSL தொடரில் கராச்சி – பெஷாவர் அணிகள் மோத இருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நகருக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தாக்குதலை அடுத்து ராவல்பிண்டி வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உடனே நகரை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் PSL தொடரில் இருந்து வெளியேற இங்கிலாந்து வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், முல்தான் சுல்தான்ஸ் அணியில் விளையாடி வரும், டேவிட் வில்லி மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் நாடு திரும்ப அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனராம். இந்த அணி, பிளே ஆப் சுற்று தகுதியில் இருந்து வெளியேறிவிட்டதால், அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025