பல மாதங்களாக நான் எச்சரித்ததை ரிசர்வ் வங்கி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த கொடிய வைரஸ் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்துக்கும் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார். மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு ஏழைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேணடும் என்பது காங்கிரஸ் கட்சியின் முதன்மை கோரிக்கையாக இருந்தது.
காங்கிரஸ் மற்றும் சில அரசியல் காட்சிகள் கூறி வந்ததை, மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பொதுமுடக்கம் காலத்தில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என்றும் பொருளாதாரத்தை மீடடெடுக்க நீண்ட காலம் எனவும் நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல மாதங்களாக நான் எச்சரித்ததை ரிசர்வ் வங்கி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அரசு செய்ய வேண்டியது எல்லாம் அதிக செலவுகள் செய்யுங்கள், அதிக கடன் கொடுக்க வேண்டாம். தொழிலாளர்களுக்கு வரி குறைப்பு அல்ல, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள். ஊடகங்கள் வைத்து திசைதிருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது. நாட்டின் பொருளாதார பேரழிவு மறைத்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…