Sugarcan Juice [file image]
நொய்டா: நொய்டாவில் கரும்பு சார் விற்பனையாளர் ஒருவர் அருவருக்கதக்க ஒரு செயலை செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு கரும்பு சார் கடைக்கு ஒருவர் அவரது மனைவியுடன் கரும்பு சார் குடிக்க வந்துள்ளார். அப்போது, கரும்பு சார் கடைக்காரரிடம் குடிப்பதற்காக 2 கரும்பு சாரை கேட்டிருக்கிறார். அப்போது அந்த கடைக்காரர் அந்த 2 கண்ணாடி க்ளாஸிலும் துப்பிவிட்டு அதில் அந்த கரும்பு சாறை கலந்து கொடுத்துள்ளார்.
இந்த அருவருப்பான செயலை அந்த நபரும் வன்மையாக கண்டித்திருக்கிறார். அதற்கு அந்த கடைக்காரரும் தகாத வார்த்தைகளால் அந்த நபரை திட்டியிருக்கிறரார். மேலும், இது குறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த தம்பதிகள் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதற்கு உடனடியாக நடிவடிக்கை எடுத்த போலீசாரும் உடனடியாக அந்த கடையில் பணிபுரியும் இருவரையும் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் கைது செய்த ஷாஹப் ஆலம் மற்றும் ஜாம்ஷெட் கான் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பஹ்ரைச்சில் இடத்தில் வசித்து வந்துள்ளனர் என்றும் நொய்டாவில் அவர்கள் கரும்புச்சாறு கடையை நடத்தி வருகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும், இது போல அருவருக்கதக்க செயலை வேறு யாரும் செய்ய கூடாது என போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சலூன் கடைக்காரர் ஒருவர் கஸ்டமரின் முகத்தில் எச்சில் துப்பிவிட்டு முக மசாஜ் செய்யும் காட்சி கேமராவில் பதிவானது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியாகி பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…