மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் சார்ந்த ஒரு பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை சிட்கோ காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த புகாரில் தனது 20 வயது மகன் கடந்த மூன்று மாதங்களாக பல முறை தனது பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து சிட்கோ போலீசார் அந்த பெண்ணின் 20 வயது மகனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில் , கைது செய்யப்பட்டவரின் தந்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும்,பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அதிகமாக குடிப்பார் என்றும் ,அவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளார்கள். கைது செய்யப்பட்ட நபர் எப்போதும் தனது தாயிடமிருந்து மது குடிக்க பணம் கேட்பார் என்றும் , அவர் பணம் கொடுக்க மறுத்தால் தாய் என்று கூட பார்க்காமல் அடிப்பார் என போலீசார் கூறினார்.
மேலும் போலீசார் கூறுகையில் ,அப்பெண் கொடுத்த புகாரில் கடந்த மூன்று மாதங்களில் அப்பெண்ணின் மகன் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ,இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார். பாலியல் துன்புறுத்தலால் சோர்ந்துபோன அந்தப் பெண் கடந்த புதன்கிழமை அதிகாலை சிட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் என போலீசார் கூறினார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…