PM Modi [Image source : HT Print]
தமிழகத்தில் இந்து கோவில்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுபாட்டிடல் செயல்பட்டு வருகிறது. இது குறித்து இன்று பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் விமர்சித்து பேசினார். தெலுங்கானாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நிஜமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய பிரதமர் மோடி, தென் தமிழகத்தில் குறிப்பாக தமிழகத்தில் இந்து கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் (அறநிலையத்துறை) இருக்கிறது. இதன் மூலம் ஆலயத்தின் சொத்துக்களை , வருமானங்களை மாநில அரசு (திமுக அரசு) முறைகேடாக பயன்படுத்தி வருகிறது.
இந்துக்களின் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது போல, ஏன் சிறுபான்மையினர் (கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் எடுக்க மறுக்கிறது. இந்து ஆலயங்களை மட்டும் ஏன் மாநில கட்டுபடுத்தி வைக்கிறது. இதனை கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வலியுறுத்தி கோவில்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளுமா.? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் மக்களை சாதி ரீதியாக, மத ரீதியாக பிரிக்க பார்க்கிறது. இந்தியாவில் ஒரே சாதி தான் பெரிய சாதி.அது ஏழை சாதி. ஏழை மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தான் பாஜக முயற்சி செய்து வருகிறது. கடந்த 9ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேறியுள்ளது எனவும் இன்று தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…