இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என எய்ம்ஸ் மற்றும் மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குப் பின்பு கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவில் தொடங்கும் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சில மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். 5 மாநிலங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரண்டு வயது முதல் 15 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் என 4500 க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் வியக்கத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளதாம்.
குழந்தைகளின் செரோ அளவு 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் செரோ விகிதம் 63.5 சதவீதம் ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபர ரீதியாக அதிகளவில் வேறுபாடு இல்லாவிட்டாலும், செரோ விகிதம் அதிகமாக குழந்தைகளிடம் இருப்பதால் பெரியவர்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனாவின் 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…