விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் ராகுல் காந்தி.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வீரர்கள் தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமத்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தி பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…