சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரேதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி அங்கன்வாடி தொழிலாளியாக அந்த பெண் பணிபுரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், ஒரு கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு, கால்கள் உடைக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அலட்சியம் காட்டியதற்காக படான் பகுதிக்கு பொறுப்பான காவலர் ராகவேந்திரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த சம்பவத்தை நடத்திய 2 குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தலைமைறைவாக உள்ள ஒரு குற்றவாளியை காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க நான்கு குழுக்களை அமைத்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை, குற்றவாளிகள் இருவர் இரவில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். வீடு திரும்பும் போது கால் நழுவியதால் கீழே விழுந்து அந்த பெண் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால், பெண்ணின் உடலைக் கொண்டுவந்த நபர்கள் மீது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், காவல்துறையினர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கடந்த 2012 நிர்பயா என்றப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நினைவுக்கு வருகிறது. தற்போது மீண்டும் அதுபோன்று கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…