3 மாதங்களுக்கு பிறகு ஆந்திராவில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் நாளை திறக்கப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது. இந்நிலையில் பல மாநிலங்களில் வழிபட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தற்போது மீண்டும் வருகிற 31-ஆம் தேதி அதாவது நாளை ஆந்திர மாநிலம் முழுவதிலும் சி சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர  அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆந்திர அரசு வலியுறுத்தியுள்ளது .

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

10 hours ago