14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான சேவைக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள் வர வேண்டும் என்றும் பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 4 மணி நேரத்திற்கு பயணிக்க இருப்பவர்கள் மட்டுமே விமான நிலைய முனையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…