அகிலேஷ் யாதவ்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளில் பாஜகவின் கோட்டையான யூ.பியில் அதிக இடங்களில் தோல்வியுற்று அதிரிச்சியளித்திருந்தது. இதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பாஜகவின் தோல்வியை குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில், “பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் வெல்ல முடியாமல் போனது அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், யூபியில் பல இடங்களில் மக்கள் பாஜக மீது நம்பிக்கை இல்லாமல் தோற்கடித்து உள்ளனர்.
யூ.பி.யில் பாஜக இன்னும் அதிக இடங்களை இழந்திருக்கும் என்பது தான் உண்மை, பாஜகவை தோற்கடித்த அயோத்தி மக்களுக்கு நன்றி. அவர்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டது. அதனால் தான் அயோத்தி மற்றும் பல பகுதிகளில் உள்ள மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் பலமாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை எதிர்க்கட்சிகளின் குரல் நம்மை நசுக்காது”, என அவர் கூறி இருந்தார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…