கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்,தேர்தல் நடத்துவதில் வேண்டாம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் கட்சியில் பிரசாந்த் கிஷோர் துணைத் தலைவராக இருந்து வந்தார்.ஆனால் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலால் அவர் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டார் . வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தனது ட்விட்டர் மூலமாக பிரசாந்த் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் .அவரது பதிவில்,இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போன்று பீகாரிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் பீகார் அரசு அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நிதிஷ் குமார் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…