தேர்தல் விளம்பரங்கள் : பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட (7ஆம் கட்ட) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து இன்னும் 9 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இப்படியான சூழலில் , தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் மாநில கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக விளம்பரங்களை பாஜக வெளியிடுவதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இறுந்தது. இந்த வழக்கில் கடந்த மே 22ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் வண்ணம் விளம்பரங்களை வெளியிட பாஜகவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும்,  அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், தவறான தேர்தல் பிரச்சாரங்கள் வாக்காளர்கள் மனதில் தீங்கை விளைவிக்கும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கானது, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகையில்,  கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் (உச்சநீதிமன்றம்) தலையிட எந்த உறுதியான காரணத்தையும் காணவில்லை என்றும், விளம்பரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நாங்கள் காண்கிறோம் என்று கூறி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு தீர்ப்புக்கு எதிராக, அதே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்ற அமர்வு.

Published by
மணிகண்டன்

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

10 minutes ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

9 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

11 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

11 hours ago