சி.டி.ரவியை வீழ்த்த காங்கிரஸ் வகுத்த மாஸ்டர் பிளான்.! 19 ஆண்டுகால பாஜக கோட்டை தகர்ந்தது.!

பாஜக தலைவர் சி.டி.ரவியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவருடைய உதவியாளராக இருந்த தம்மையாவை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது.
19ஆண்டுகாலமாக பாஜகவின் கோட்டையாக இருந்த சிக்மகளூர் தொகுதியை தற்போது காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுவும், 19 ஆண்டுகளாக எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர், பாஜக முக்கிய தேசிய தலைவர், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த சி.டி.ரவி நடந்து முடிந்த இந்த தேர்தலில் தோல்வி கண்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் ஒரு பக்காவான மாஸ்டர் பிளான் ஒன்றை தீட்டியுள்ளது அந்த தேர்தல் பின்புலத்தை பார்த்தால் தெரிந்துவிடும். சி.டி.ரவிக்கு முக்கிய முதன்மை உதவியாளராக இருந்தவர் தம்மையா. இவர் திடீரென பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவியை போலவே, தம்மையாவுக்கும் செல்வாக்கு அதிகம். இதனை அறிந்த காங்கிரஸ் , சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தம்மையாவை நிறுத்தியது. இதற்க்கு பலனாக 7 ஆயிரம் வாக்குக்கள் வித்தியாசத்தில் தனது குருவான சி.டி.ரவியை வீழ்த்தி, 19 ஆண்டுகால பாஜக கோட்டையை காங்கிரசிற்கு கைப்பற்றி தம்மையா தந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025