நீங்கள் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். இந்த ஆண்டு குறைந்தபட்ச கட்டணத்தை தபால் அலுவலக கணக்கில் வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. ஒரு தபால் அலுவலக கணக்கில் குறைந்தது ரூ.500 வைத்திருப்பது கட்டாயமாகும். இது குறித்து இந்தியா போஸ்ட் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த தகவலின் படி, தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தது ரூ.500 வைத்திருக்க வேண்டும். இந்தியா போஸ்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், ‘இப்போது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிப்பது கட்டாயமாகும். எனவே நீங்கள் உங்கள் கணக்கில் பராமரிப்பு கட்டணத்தை செலுத்த விரும்பினால் இன்றுடன் ரூ.500 க்கு உங்கள் கணக்கில் பராமரிக்க கடைசிநாள் என தெரிவித்துள்ளது.
தற்போதைய விதி:
இந்தியா போஸ்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சேமிப்புக் கணக்கில் ரூ.500 குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், ஆண்டுக்கு ரூ.100 பிடித்தம் செய்யப்படும், மேலும் கணக்கில் இருப்பு இல்லை என்றால், கணக்கு தானாக மூடப்படும்.
வட்டி விகிதம்:
சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதமாகும். வட்டி மாதத்தின் 10-ம் தேதி முதல் மாத இறுதி வரையிலான குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே கணக்கின் இருப்பில் 10-ம் தேதி முதல் மாதத்தின் கடைசி நாள் வரை ரூ.500 க்கு குறைவாக இருந்தால் அந்த மாதத்தில் வட்டி அனுமதிக்கப்படாது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…