Top 10 News: (1.09.2023) இன்றைய முக்கிய செய்திகள்.!

Today's Top 10 News

1. தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

2. சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளை (செப்டம்பர் 2) காலை விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்க உள்ளது.

3. இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில், இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படுகிறது.

4. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.157.50 குறைந்து ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.

5. டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை அனுமதி இல்லை.

6. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபிணி அணைகளில் இருந்து நீர் திறப்பால், இன்று காலை நிலவரப்படி காவிரி அணையில் 9180 கன அடியாக உள்ளது.

7. சென்னை வடபழனி தேவி கருமாரி திரையரங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு ‘உலக சினிமா விழா’ நடைபெறவுள்ளது, பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

8. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

9. சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி இன்று முதல் தொடக்கம்.

10. தமிழ்நாட்டில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்