குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 31-ம் தேதி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அவர்களது புகாரை ஏற்காமல் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததால் அவரைத் திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.
இந்நிலையில் ஜனவரி 5-ம் தேதி அதே கிராமத்தில் இளம்பெண் ஒரு ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இளம் பெண்ணின் உடலை மருத்துவ பரிசோதனை செய்ததில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தெரியவந்தது.
பின்னர் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்ஷன், சதீஷ் ,பிமல் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
குற்றவாளிகள் நான்கு பேர் மீது வன்கொடுமை ,கொலை போன்ற பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…