[file image]
உத்தரபிரதேசத்தில் திருமணமான இளம் ஜோடிகள் முதலிரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான இளம் ஜோடிகள் முதலிரவின்போது தூக்கத்தில் இறந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோதியா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதாப் யாதவ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 புஷ்பா தேவி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே 30-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அடுத்தநாளான மே 31ம் தேதி ஊர்வலமாக புதுமண தம்பதி வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
அன்றிரவு தம்பதி இருவரையும் மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்த உறவினருக்கு, அடுத்த நாள் காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, முதலிரவு அறைக்குள் சென்ற இளம் ஜோடிகள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், பதற்றமடைந்த உறவினர்கள், அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
அறைக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் பேச்சு மூச்சின்றி சடலமாக இருந்தனர். இதனை கண்டு அதியடைந்த உறவினர்கள், இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களும் பரிசோதித்து மரணத்தை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் இருவரும் மாரடைப்பால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் காட்டுகின்றன என கூறியுள்ளனர்.
மேலும், காற்றோட்டம் இல்லாத அறையில் முதலிரவு நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு இருவரும் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், 24 மற்றும் 22 வயதுடைய தம்பதியர், இதயப் பிரச்சனையின் கடந்தகால மருத்துவ வரலாறு ஏதும் இல்லாததால், ஒரே நேரத்தில் மாரடைப்பு எப்படி ஏற்பட்டது என சந்தேகிக்கின்றனர்.
தம்பதிகளின் மரணத்தில் உள்ள மர்மத்தை அவிழ்க்க லக்னோவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்தில் இரு உடல்களின் உள்ளுறுப்புகளும் கூடுதல் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளதாக பல்ராம்பூர் எஸ்பி பிரசாந்த் வர்மா தெரிவித்தார். இருப்பினும், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், தம்பதியினர் இறந்து கிடந்த அறையில் காற்றோட்டம் இல்லை என்றும், தூங்கும் போது மூச்சுத் திணறல் காரணமாக அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…