Uttarakhand Tunnel accident [file image]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 14-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை தோண்டும் பணி நடந்து வருகிறது.
மீட்பு பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை சரி செய்து, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அங்குள்ளவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தற்போது கைகளால் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது காரணமாக இயந்திரத்திற்கு பதிலாக கைகளை கொண்டு துளையிட மீட்பு படையினர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… என்னென்ன ஆவணங்கள் தேவை?
குழாயில் இருந்து ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை அனுப்பி துளையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகையில், முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…