டெல்லியில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை 40,000 ரூபாயிக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக பல தடுப்பு நடவடிக்கைகளும் ஊரடங்கு விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி சில மோசடி நபர்கள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்று வருகின்றனர்.
இதனையடுத்து டெல்லியில் ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் உட்பட 2 நபர்கள் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசியை விற்றுள்ளனர், இதனையறிந்த டெல்லி போலீஸ் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணையில் அவிச்சல் அரோரா(30), பிரதீப் பரத்வாஜ்(34) ஆகிய இருவரிடமும் எந்த வித மருந்து சீட்டும் இல்லாமல் ரெம்டெசிவிர் தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்ட்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் கூறுகையில், பரத்வாஜ்டமிருந்து கொரோனா தடுப்பு மருந்தினை பாயல் சவுத்ரி மூலம் ரூ.30,000 க்கு வாங்கியதாகவும் அதை மேலும் ரூ.40,000 க்கு விற்றதாகவும் விசாரணையில் அரோரா தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பரத்வாஜ் டெல்லியில் ஷாலிமர் என்ற பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டு, மேலும் அவரிடமிருந்து 6 ஊசிகள் கைப்பற்றப்பட்டதாக துணை காவல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாபாத்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். இதில் குற்றம்சாட்டப்பட்ட அந்த 2 செவிலியர்களும் கொரோனா வார்டில் நோயளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…