UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது! 14,624 பேர் தேர்ச்சி!

upsc

கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 28ம் தேதி நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC முதல்நிலை தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது UPSC. மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை (மெயின்) தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யு.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில்  வெளியிடப்படும் என்றும் முதல்நிலை தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிவித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்