கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்நிலையில்,கொரோனாவிற்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். இது குறித்து திலிப் கோஷ் கூறுகையில், நான் பசுவை பற்றி பேசினால் பலருக்கு பிடிக்காது. பசு மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது. இந்தியர்கள் பசுக்களை வணங்கி வருகிறோம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க கோமியத்தை அருந்த வேண்டும். மேலும், பசுவின் மதிப்பு மது அருந்துவோருக்கு எப்படி புரியும் என கூறுகிறார். திலிப் கோஷ் இதுபோல பேசுவது முதல் முறையல்ல, இதற்கு முன் கடந்த ஆண்டு பசுவின் பாலில் தங்கம் உள்ளது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திலிப் கோஷின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…