மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது.இதைதொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா கட்சி குடியரசு தினத்தையொட்டி வாக்குறுதி அளித்து இருந்த ரூ.10-க்கு மதிய உணவு திட்டத்தை நேற்று அமல்படுத்தியது.
இந்த திட்டத்திற்கு “சிவ போஜன்” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைநகரங்களில் இந்த திட்டத்தை மாநில மந்திரிகள் தொடங்கி வைத்தனர்.
ரூ.10-க்கு சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி வழங்கப்படும்.இந்த உணவகம் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் .இந்த உணவகங்களில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த 3 மாதங்களுக்கு 6 கோடியே 40 லட்சம் செலவாகுமாம்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…