உத்தரபிரதேச வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் உயிரிழப்பு!

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தின் வருவாய் துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அமைச்சர்  காஷ்யப் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து  கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தன் செல்கிறது.

ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் கொரோனா காரணமாக அமைச்சர் கமல் ராணி வருண் மற்றும் சேதம் சவுகான் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் 56 வயதுடைய உத்தரபிரதேச மாநிலத்தின் வருவாய் துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சர் விஜய் காஷ்யப் குர்கான் அவர்கலும் தற்பொழுது கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். முசாபர்நகரில் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இருப்பினும் இன்று விஜய் காஷ்யப் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பாஜக சார்பில் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் காஷ்யப் அவர்களின் மரணம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், எப்பொழுதும் பொதுநலன் சார்ந்த பணிகளில் அர்ப்பணிப்புடன் இருந்த அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், ஓம் சாந்தி எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!

காசா :  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…

36 minutes ago

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

1 hour ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

2 hours ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

2 hours ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

2 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

3 hours ago