கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்க்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், டெஹ்ரா-டுனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
இதனையடுத்து அவர், நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை, தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல்வரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025