உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 32 உடல்கள் மீட்பு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட திடிர் பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தேடுதல் மற்றும் நிவாரணம் :
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி), தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில பேரிடர் பதிலளிப்பு படை (எஸ்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றின் 600 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாமோலி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தின் விளைவாக துண்டிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களுக்கு ரேஷன், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற ஐ.டி.பி.பி ஜவான்களுக்கு நன்றி தெரிவிக்க உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 35 பேர்:
என்டிபிசியின் தபோவன்-விஷ்ணுகாட் திட்டத்தில் சுரங்கப்பாதையில் டைவர்ஸ் உள்ளிட்ட இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2.5 கி.மீ நீளமுள்ள ‘ஹெட்ரேஸ் டன்னல்’ (எச்.ஆர்.டி) க்குள் 25-35 பேர் சிக்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்குச் செல்ல சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஒரு அதிகாரி கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…