uttarkashi tunnel rescue [Image source : PTI]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில், சில்கியரா – தண்டல்கான் இடையே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் 12இல் ஏற்பட்ட விபத்தில் சுரங்கம் வெளியுலக தொடர்பை துண்டித்து பாதை முழுதாக முடியாது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலைபார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே மாற்றிக்கொண்டனர்.
கடந்த 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழு, சுரங்க பணியில் ஈடுபட்ட குழு, நெடுஞ்சாலைத்துறையினர் என பலரும் இந்த மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முதற்கட்டமாக, கிடைமட்டமாக சுரங்கம் தோண்டப்பட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு தோண்டப்பட்ட சுரங்கப்பாதை மண்சரிவு ஏற்பட்டு, மேற்கொண்டு துளையிட முடியாத நிலை உருவானது. 57 மீட்டர் ஆழம் கொண்ட சுரங்கத்தினுள் முழுவதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அடுத்து, செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினமே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று பிற்பகலில் மீண்டும் மீட்புப்பணி தொடங்கப்பட்டு, 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரையில் உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளை சிறிய அளவிலான குழாய் ஏற்கனவே பதிக்கப்பட்டுவிட்டது. அதன் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
பெரிய குழாய் பணிகள் தோண்டும் பணி முழுதாக நிறைவுற்றதும், அடுத்ததாக சர்க்கர ஸ்டரச்சர் மூலம மீட்பு படையினர் உள்ளே அனுப்பப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியை கண்காணிக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புபணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தனது சிறிய அலுவலகத்தை உத்தர்காசி பகுதியில் அமைத்துள்ளார்.
மேலும் இன்று உத்தரகாண்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருந்த ஈகை விழாவை கொண்டாட வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டு, பசுவை வணங்கி மிகவும் எளிமையாக விழாவைக் கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டது. இன்று ஈகாசை முன்னிட்டு, முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவரது இல்லத்தில் சுமார் ஆயிரம் பேருடன் விழாவில் கலந்து கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…