விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கில் போலி ஐடியில் சிம் பயன்படுத்திய விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதனையடுத்து விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையில் விகாஸ் துபேயின் மனைவி மற்றும் உறவினர்கள் போலி ஆவணங்களின் கீழ் சிம் வைத்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே மீது கான்பூர் காவல் நிலையம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்த போது, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ரிச்சா துபே மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் போலி ஐடியில் சிம் பயன்படுத்திய குற்றச்சாட்டில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே விரைவில் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…