உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த விகாஸ் துபே பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கூறி இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த ஜூலை 2- ஆம் தேதி அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபே பிரபல ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பலர் துப்பாக்கியுடன் சென்றனர்.
ஆனால், போலீசார் பிடிக்க வரும் தகவல் விகாஸ் துபேவுக்கு தெரியவர தனது கூட்டாளிகளோடு பதுங்கி இருந்தான். அப்போது, போலீசார் அவனது வீட்டை நோக்கி வரும் போது போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும், 6 போலீசார் படு காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையை அமைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை ரவுடி விகாஷ் துபேவின் நெருங்கிய நண்பர் அமர் துபேவை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், இன்று பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்டார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…