கழிவறையில் போதைப்பொருள் உட்கொண்ட இளம்பெண்கள்.. வசமாக சிக்கிய வைரல் வீடியோ.!

Pune mall - washroom

மகாராஷ்டிரா : புனேயில் உள்ள ஒரு பிரபல மாலின் கழிவறையில் இரண்டு இளம்பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அமைந்திருக்கும் மாலில் இரண்டு இளம் பெண்கள் போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில், போதைப்பொருளை உட்கொண்ட அந்த இரு பெண்களை, மாலில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் வெளிப்படையாக படம் பிடித்துள்ளார். அதனை கவனித்த பெண்கள் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கேட்க,  பின்னர் படம்பிடித்த பெண் ஊழியர் அவர்களை வெளியே வரும்படி அழைக்கிறார்.

முன்னதாக, புனே பெர்குசன் கல்லூரி சாலையில் உள்ள லிக்விட் லீஷர் லவுஞ்ச் (எல்3) என்ற பப்பில் இளைஞர்கள் சிலர் போதைப்பொருள் போன்ற பொருளை உட்கொண்டதைக் காட்டிய மற்றொரு வீடியோ பரவிய ஒரு நாள் கழித்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டும் இது போன்று சம்பவங்கள் நிகழ்வதால், புனேவில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறதா என்ற என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war