எச்சரிக்கை : ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு…!

கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா விமான நிறுவன, இணையதள பக்கமான எஸ்ஐடிஏ-ல் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வேர்ட் விபரம், டிக்கெட் விபரம், கிரெடிட் கார்ட் விவரங்கள் கசிந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன இணைய தளமான சர்வரில் சில சிக்கல்கள் நிறைந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் உலக அளவிலான பயணிகளில் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த தகவல்களை, பயணிகளின் விவரங்களை சேமிக்கும் டேட்டா பிராசஸரிடம் இருந்து, கடந்த பிப்.25ம் தேதி இந்த தகவல்களை பெற்றோம். இதில் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. பாஸ்வேர்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு அறிவுறுதியுள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025