காலதாமதம் செய்யாதீர்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அறிவுறுத்தல்!

Congress MP Rahul Gandhi has urged on his Twitter page that the corona vaccination program should be expedited and not delayed.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யாதீர்கள் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை கையாளவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆரம்பம் முதலே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல்காந்தி. இந்தியாவில் 70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டு உள்ளதாக வெளியான நாளிதழ் ஒன்றை இணைத்து, தடுப்பூசியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யதீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node