எச்சரிக்கை : ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு…!

Published by
லீனா

கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா விமான நிறுவன, இணையதள பக்கமான எஸ்ஐடிஏ-ல் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வேர்ட் விபரம், டிக்கெட் விபரம், கிரெடிட் கார்ட் விவரங்கள் கசிந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன இணைய தளமான சர்வரில் சில சிக்கல்கள் நிறைந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் உலக அளவிலான பயணிகளில் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்குமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல்களை, பயணிகளின் விவரங்களை சேமிக்கும் டேட்டா பிராசஸரிடம் இருந்து, கடந்த பிப்.25ம் தேதி இந்த தகவல்களை பெற்றோம். இதில் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. பாஸ்வேர்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு அறிவுறுதியுள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

23 hours ago