குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து காந்திநகர் ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், அந்த கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு உறுப்பான SARS-CoV-2 படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸின் தன்மையை விட, மே 27-ந் தேதி வைரஸின் தன்மை அதிகமாக உள்ளது என தெரிவித்தனர்.
இதற்கான காரணம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. மேலும், இந்த கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இத்தாலியை தொடர்ந்து, தற்பொழுது இந்தியாவிலும் கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என தெரிவித்த விஞ்ஞானிகள், அதை எப்படி தடுப்பது என்று மேற்கொண்டு ஆய்வுகள் மூலம் தெரியவரும் என தெரிவித்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…